மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்கிறதில்லை

ர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்தபசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. (சங்கீதம் 19: 7–11)

மனிதனிடத்தில் அவனுக்கு தேவையான எல்லாம் இருந்தால்கூட இருதயத்தில் ஒரு வெறுமைதான் இருக்கிறது. ஜனங்கள் தங்களை பொழுதுபோக்கு, நண்பர்கள் என்று பலகாரியங்களில் பிசியாக வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த வெறுமை நம்மை உண்டாக்கிய தேவனோடு உள்ள உறவினால் மட்டுமே முழுமை அடையமுடியும். விசுவாசிகள் தேவனாலும், அவருடைய வார்த்தைகளினாலும் எந்த அளவுக்கு சந்தோஷத்தால் நிரம்பி இருந்தார்கள் என்று நாம் வேதத்தில் பார்க்க முடியும். இந்த சந்தோசம் ஒழிந்துபோகாது; இது முடிவில்லாத சந்தோசம்; அதை யாராலும் எடுத்து கொண்டு போகமுடியாது.

உண்மையானஅப்பம்

இன்று. நிறையமக்கள் அழிந்து போகிற, நிலைநிற்காத பூலோககாரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் இயேசு இப்படியாக சொன்னார்

மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்என்றுஎழுதியிருக்கிறதேஎன்றார்(மத்தேயு 4: 4)

நாம் மூன்று வேளை உணவு உண்பதற்கு மறப்பதில்லை. நம்முடைய சரீர வளர்ச்சிக்கு எப்படி உணவு தேவையோ அதேபோல ஆத்மீக வளர்ச்சிக்கு தேவனுடைய வார்த்தை மிகவும் அவசியம். மனிதன் சரீரத்தினால் மட்டுமல்ல ஆவியினாலும் உண்டாக்கப்பட்டிருக்கிறான். நம்முடைய ஆவி கண்ணனுக்கு தெரியாததும் முடிவில்லாததுமாய் இருக்கிறது. அதினாலே நாம் அதற்கு அதிக பாதுகாப்பு (கவனம்) கொடுக்க வேண்டும்.

தேவனைநேசிப்பது

தேவன் மனிதனுக்கு கொடுத்த முதன்மையான கற்பனை அவரை அன்பு செய்வது:

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி. (உபாகமம் 6: 4–7)

தேவனை நேசிப்பதும் வேதத்தை வாசிப்பதும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்தது. தேவனை உணமையாக நேசித்தால் அவருடைய வார்த்தையின் மூலம் அவரை அறிந்து கொள்ள விருப்பம் கொள்வோம். வேதத்தை வாசிக்க நேரம் எடுக்காததும், அதன்படி வாழாமல் இருப்பதும் தேவனை நேசிப்பதில் குறையுள்ளவர்களாய் இருப்பதை காண்பிக்கிறது. இயேசுவும் இதைப்பற்றி சொல்லுகிறார்.

ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். (யோவான் 14:23)

மேரி தேவன்மேல் உள்ள அன்பை சரியான முன்னுரிமை (முக்கியத்துவம்) கொடுத்து வெளிப்படுத்தினாள். அவள் இயேசுவினுடைய வார்த்தையை கேட்கமுக்கியத்துவம் கொடுத்தாள். இயேசுவும் அதை பாராட்டினார்.

பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒருகிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒருசகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னைவிட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக்கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். (லூக்கா 10: 38–42)

தேவனுடையவார்த்தையேவெளிச்சம்

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம்119:105)

நம்முடைய வாழ்க்கை பாவத்தினாலும், நிறைய தவறான முடிவுகளினாலும் சேதமடைந்துள்ளது. இந்த சேதத்தை மீட்க ஓரே வழி தேவன் பக்கம் திரும்பி, அவருடைய சித்தத்தின்படி வாழ நம்முடைய விருப்பத்தை ஆழபடுத்துவதுதான். நாம் இப்பொழுது ஒளியான தேவனுடைய வார்த்தையை ஏற்று கொள்ளாவிட்டால், இருளான பாவத்திலே நடப்பதற்கு கொண்டுபோய்விடும். ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை நம்முடைய அனுதின வாழ்க்கையில் வழிகாட்டுதலை தரும். அதன்மூலம் நாம் பரிசுத்தமான வழியில் வாழ முடியும். பழையஏற்பாட்டின் விசுவாசிகளும் தேவவார்த்தையில் இருந்து பெற்று கொண்ட பலத்தை அனுபவித்திருக்கிறார்கள்.

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே. (சங்கீதம்119:9)

தேவவார்த்தையின் மூலம் பரிசுத்தப்படுதல்

யாராவது வேதத்தை திறந்த உள்ளத்தோடு வாசிக்கும்போது அவன் பரிசுத்த தேவனை காண்பான். அவருடைய பரிசுத்த வெளிச்சத்திலே அவனுடைய குறைகளையும் பாவங்களையும் காண்பான்.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும. (எபிரேயர் 4: 12–13)

தேவனுடைய வார்த்தை மூலம் பரிசுத்தபடுதல் தேவனை சந்திக்க நம்மை தயார்செய்யும். ஆதலால் நாம் தேவனுக்குரிய மதிப்பில் வாழவேண்டும். அது நம்மை கடைசிநாளில் நியாயம்தீர்க்கும்.

இயேசுவின் வார்த்தைகளுக்கு பாவத்திலிருந்து நம்மை சுத்திகரிக்க கூடிய வல்லமை உண்டு.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (யோவான்17:17)

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன். (சங்கீதம்119:11)

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதரசி நேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாதவித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (1 பேதுரு 1:22–25)

இங்கே தேவனின் முடிவில்லா வார்த்தை அழிந்துபோகிற பொருள்களுக்கு வேறுபாடாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேதத்தை வாசிப்பதற்கான அணுகுமுறை

நிறையபேர் வேதத்தை கடமைக்காகவோ அல்லது சபை கோட்பாடுகளை கடைபிடிப்பதற்காகவோ வாசிப்பார்கள். ஒருநாளைக்கு சில அதிகாரங்களைகூட வாசிப்பார்கள். இந்தமாதிரியான விதிமுறைகள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறதற்கான நோக்கத்தை முழுமையாக புறக்கணிக்கிறது. நாம் ஜெபத்தில் தேவனோடு பேசுகிறது போல அவர் தம்பிள்ளைகளோடு பேசவிரும்புகிறார். தேவனுடைய வார்த்தை வேதத்தில் மாறாது. நமக்கு திறந்த காதும், உண்மையான இருதயமும் இருந்தால், வேதம் வெவ்வேறு நேரங்களில் நம்மோடு பேச முடியும்.

வேதம் வாசிப்பது ஒரு பழக்கமாகவோ அல்லது விஷயங்களை சேகரிப்பதற்காகவோ இருக்கக்கூடாது. ஆனால் ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்காகவும் தேவனோடு உறவு கொள்வதற்காகவும் இருக்க வேண்டும்.

சீமோன் பேதுரு அவருக்குப்பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவவசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான் 6:68)

முன்னதாக எங்களில் சிலரும் கூட வேதத்தை தவறான முறையில் வாசித்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சரியான அணுகுமுறையை கண்டு கொண்டோம். உங்களையும் தொடர்பில் இருக்க அழைக்கிறோம். இதன் மூலம் வேதத்தை வாசித்து அதை பற்றி ஆலோசிக்கலாம்.

தேவனுடைய வார்த்தையை வாழ்வில் நடைமுறை படுத்துதல் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழைசொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழைசொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7: 21–27)

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாத படிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். (யாக்கோபு 1:22)

நிறையமக்கள் எங்களுக்கு சத்தியத்தை தெரிந்து கொள்ள முடியாது அல்லது ஒவ்வொருவனுக்கும் அவனுடைய சொந்த சத்தியம் உண்டு என்று சொல்லுவார்கள். ஆனால் இயேசு மற்றும் அவருடைய வார்த்தைகளின் மூலம் நாம் ஒரே சத்தியத்தை அறிந்து கொண்டோம். இந்த சத்தியத்திற்கு மட்டும் தான் நம்மை விடுதலையாக்க கூடிய வல்லமை உண்டு.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8: 31–32)

 உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்(சங்கீதம் 119:164)

Scroll to top ↑