முதலாம் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை

... இன்று நமக்கு இதின் அர்த்தம் என்ன?

சகோதரரே நாங்கள் என்ன செய்யவேண்டும்?

ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை

கீழே சொல்லப்பட்டிருக்கிற வசனம்   (அப்போ 2:1–13) உள்ளது. அதில் பெந்தகொஸ்தே நாளில் பேதுரு யூதர்களுக்கு பிரசங்கித்த கடைசி பாகமும் விசுவாசிகளின் பதிலும் இருக்கிறது.

இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர சேர்த்து கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

இயேசுவைப் போல பேதுருவும் மனம் திரும்புதலுக்காக ஜனங்களை அழைக்க தொடங்கினார். தேவ பிள்ளையாய் வாழ்வதற்கு, பாவம் ஆளுகிற பழைய வாழ்க்கையை புறக்கணிக்க வேண்டும். தேவனிடத்திலிருந்து நம்மை பிரிக்கிற பாவங்களை விட்டு ஒளியில் வரவேண்டும்.

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்(1யோவான் 1:5–7)

நேர்மையான மனசாலே மாத்திரம்தான் மனிதனால் பரிசுத்த தேவனிடத்தில் வர முடியும். ஒருவன் தன் பாவங்களை தேவன் முன்பாக கொண்டு வந்தால் தேவன் தேவன் அதை மன்னித்து தேவ ஆவியை அனுமதிக்கிற புதிய மனிதனாய் மாற்றுவார். தேவனுடைய ஆவி மனம்திரும்பினவர்களை அன்புள்ள வாழ்க்கைக்காக வழி நடத்தும். தன் முழு வாழ்க்கையை கொடுப்பது தான் அன்பின் அர்த்தம் என்று இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் இருந்து புரிந்து கொண்டார்கள். இந்த அர்பணிப்பிலேதான் முதலாம் கிறிஸ்தவர்கள் சபையை தொடங்கினார்கள். தேவன் அவருடைய பிள்ளைகளின் இருதயத்தில் ஊற்றுகிற அன்பு அவர்களை தனக்காக வாழாமல் தேவனுக்காகவும், தன் சகோதரருக்காகவும் வாழவைக்கும். பவுல் இந்த விதத்தில் சொல்லுகிறார்…

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம. (2கொரி 5:14–15)

இயேசுவைப் போல முதலாம் கிறிஸ்தவர்களும் தனக்காக வாழ வில்லை. இந்த அன்பின் வழியில் நடக்க தடையா இருக்கிற எல்லா விஷயங்களிலும் இருந்து விடுதலை பெற போராடினார்கள். அதாவது அவர்களுடைய வீடு, தோட்டம் குடும்பங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவைகளிலுருந்து…. தேவனுடைய சேவைக்கும் ஜனங்களுடைய இரட்சிப்புக்கு தடையாய் இருக்கிற எல்லா விஷயங்களையும் விட்டுவிட அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த வழியில்லாமல் வேறு எந்த விதத்திலும் சேவை செய்ய முடியாது இயேசுவினிடத்திலுருந்து அறிந்திருந்தார்கள். இதனோடு கூட ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது..

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத் தொடங்கினான்.அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு 10:28–30)

தன்னை தான் வெறுத்து, சுயமாய் முடிவு செய்கிற வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு தயாராய் இருந்த மனப்பான்மையால் அவர்களால் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு முழுமையாய் வாழ முடிந்தது. அவர்கள் அவர்களுடைய நேரத்தை தேவாலயத்தில் மற்ற யூதர்களிடத்தில் பேசுவதற்கும் இயேசுவே மெசியா என்று சாட்சி கொடுப்பதற்கும் பயன்படுத்தினார்கள். அனுதின ஐக்கியத்திற்காக அவர்கள் வீடுகளில் கூடிவந்தார்கள். அவர்களுடைய சிறிய கூடுகையில் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கவில்லை. அது ஒரு ஈடுபாடுடில்லாத இல்லாத வழிபாடுமுறை போல அல்லது ஒரு நிகழ்ச்சி போல இருக்கவில்லை. முன்பு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தூரமாகவும், அந்நிய ராகவும், விரோதமாகவும் இருந்திருந்தாலும் கூட நடைமுறையில் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக வாழ்ந்தார்கள். சபை எல்லாருக்காகவும் திறந்திருந்தது, அதாவது: பணக்காரர்கள்- ஏழைகள், ஆண்கள்-பெண்கள், யூதர்கள்- புறஜாதிகள், அடிமைகள்- சுயாதீனர்கள், வாலிபர்கள்- முதியோர்கள். அவர்களுடைய ஐக்கிய வாழ்வு அப்போஸ்தலர்களுடைய உபதேசத்திலும் இயேசுவின் வாழ்க்கை மற்றும் அவர் கட்டளைகள் மேல் கட்டப்பட்டது. இயேசு மக்களுக்கு எப்படி சேவை செய்தாரோ அதைப்போல அவர்களும் ஒருவருக்கொருவர் சேவை செய்தார்கள், ஊக்குவித்தார்கள், கண்டித்தார்கள், ஆறுதல் கொடுத்தார்கள் மற்றும் தவறுகளை திருத்தினார்கள். அவர்கள் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஒருவரோடு ஒருவர் செலவு செய்தார்கள். அதினால் அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாய் அறிந்திரிந்தார்கள். அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கு எங்கே உதவி தேவை என்றும் அவர்கள் அறிந்திரிந்தார்கள். இன்றைக்கு சபைகளில் விசுவாசிகளின் உறவுகள் மேலோட்டமானதும் கொஞ்ச காலம் நிலைத்திருக்கக் கூடியதுமாய் இருக்கிறது. இங்கே நாம் உண்மையான அன்பு கூறுவது சாத்தியமில்லை. ஆதி கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டார்கள், பாவங்களையும் பலவீனங்களையும் அறிக்கை செய்தார்கள், விசுவாசத்தின் உடைய போராட்டத்தை போராடுவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். இவைகளெல்லாம் தேவனுக்கு பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான உதவி கொடுக்கிற விருப்பத்தினால் செய்தார்கள். இதனாலே அவர்கள் அனைவரும் விசுவாசத்தின் நோக்கத்தை அடைய முடிந்தது: அதாவது தேவனுடைய பிரசன்னத்தில் நித்திய சந்தோஷமாகும். அனுதின சகோதர ஐக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை எபிரேயர் 3:12–14 காட்டுகிறது.

சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

அவர்களுடைய அன்பு, பக்திவைராக்கியம், ஒற்றுமையினால் அவர்கள் இயேசு சொன்ன ஒளியானார்கள். இது சுற்றியிருந்த ஜனங்களை கவர்ந்தது. அதே பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பமில்லாதவர்கள் கிறிஸ்தவர்களோடு சேர துணியவில்லை.

இயேசு இரட்சகர் என்ற ஒரே விசுவாசம் அவருடைய வார்த்தையின் சாத்தியத்தினால் கிறிஸ்தவர்கள் ஆழமான ஒற்றுமையில் வாழ்ந்தார்கள். ஆனால் எவராவது சுய தீர்மானத்தின் படியோ சுயநலமாகவோ வாழ முடிவெடுத்தால் இந்த ஒற்றுமை அழிந்து போகும்.

அனன்யா மற்றும் சப்பிராள் உடைய உதாரணம் கிறிஸ்தவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால் எவ்வளவு பெரிய அழிவை கொண்டு வரும் என்று சொல்லுகிறது. அவர்கள் இருவரும் அவர்களுடைய நிலத்தை விற்றார்கள், ஆனால் பகிர்ந்து கொள்ளுதலை குறித்து அவர்கள் உண்மையாய் இருக்கவில்லை மற்றும் அப்போஸ்தலர்கள் இடத்தில் பொய் சொன்னார்கள். அவர்களிடத்தில் ஒரு நல்ல காரணம் இருதிருந்தால் அவர்களிடத்தில் இருந்தவைகளை அவர்களே வைத்திருந்திருக்கலாம். அவர்களுடைய திட்டத்தை மறைத்து வைக்க தேவையில்லை. வெளிப்படையாகவும் நம்பிக்கையோடும் எல்லாவற்றையும் அவர்கள் பேசி இருந்திருக்கலாம்.

நேர்மையற்றவர்கள் தேவனுடைய சபையில் இருக்க முடியாது. அவருடைய சத்தியத்தை உண்மையாய் தேடுகிற விருப்பத்தை விட்டுவிட்டால் ஒற்றுமையும் நம்பிக்கையும் அவர்களுக்கிடையே ஒழிந்துபோகும். தேவனுக்கு சேவை செய்கிறதில் ஒற்றுமை இருக்காது. இது நம்மை கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையின் அடுத்த முக்கிய கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது அதாவது அவர்கள் தங்களுடைய ஆஸ்திகளை பகிர்ந்து வாழ்ந்தார்கள்.

விசுவாசிகள் சகலத்தையும் பொதுவாய் வைத்தார்கள்

மாற்கு(10:28–30) — இந்த வசனங்களில் இயேசு தன் சீடர்களுக்கு தோட்டங்கள் மற்றும் வீடுகள் கூட ஒரு வாக்குத்தத்தமாக கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் கிறிஸ்தவர்கள் மூலமாய் நிறைவேறியது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் இனி தனக்கு சொந்தமானவகள் எதையும் தனக்கு சொந்தம் என்று எண்ணவில்ல. அவர்கள் சகலத்தையும் பொதுவாய் வைத்து விசுவாசத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் பகிர்ந்து கொடுத்தார்கள். யாரும் அவர்களை இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. தேவனுக்கு முன்பாக அவர்களுடைய மனசாட்சியின்படி தங்கள் சொத்தை என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க சுதந்திரமாய் இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஆஸ்திகளை பகிர்ந்து கொள்ளுதல் அவர்களுக்கு இடையே இருந்த நம்பிக்கை மற்றும் எப்படி இணைக்கப்பட்டு பிணைக்கப்பட்டு இருந்தார்கள் என்பதற்கு மிகவும் வெளிப்படையான உண்மையான சாட்சியாய் இருந்தது. இது உலகத்தில் பார்க்கமுடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அவர்கள்புதிய சிருஷ்டியாக ஆனதினாலே பூமிக்குரிய விஷயங்களை பற்றிகொள்ளவில்லை.அழிந்து போகாத விஷயங்கள் அவர்களுக்கு அதிக விலை மதிப்பாக இருந்தது. அதனால் அழிந்து போகிற விஷயங்களை கூட தேவனுடைய ராஜ்யத்திற்கு அர்ப்பணிக்க இயல்பான விஷயமாக இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் ஒரு பொதுவான காசு பெட்டியில் போடாமல் அவர்களிடத்தில் இருந்தவைகளை தேவையின் படி கொடுத்தார்கள். இது அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் மாத்திரம் இல்லாமல் அப்போஸ்தலர் 4:32–47கூட இருக்கிறது.

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

கிறிஸ்தவர்கள் வார்த்தையின் மூலமாய் மாத்திரம் அன்பு கூறாமல் கிரியையிலும் சத்தியத்திலும் அன்புகூர்ந்தார்கள்.

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். (1யோவான் 3:16–18)

கிறிஸ்தவர்கள் ஆஸ்திகளை பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்களின் பொருட்கள் மேல் சார்ந்திருக்க வேண்டும் என்று கிடையாது. ஒவ்வொருவரும் வாழ்வதற்கு வேலை செய்து; சாதாரண வாழ்க்கை முறையின் மூலமாய் தேவையானவர்களுக்கு உதவி செய்ய முடியும். இதைப்பற்றி பவுல் தெசலோனிக்கருக்கு எழுதுகிறதாவது..

ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். (2தெச 3:10–12)

இன்றைக்கு சபையில் சகோதர அன்புக்கு பதிலாக மத சடங்குகள், கூட்டங்களில் பங்கு பெறுதல் தான் முன்னிடத்தில் இருக்கிறது. இந்த மாதிரியான அமைப்புகளில் மக்கள் தங்களுக்கு உரியவர்களை பகிர்ந்து கொடுக்க தயாராக இல்லை. இன்றைக்கு விசுவாசிகளின் சபை என்று சொல்லுகிறவர்களின் மத்தியில் வேதத்தில் சொல்லப்படாத சபை வரி மற்றும் தசம பாகம் இவைகளை பொதுவாக காண முடியும். இதுவும் ஒரு மேலான பகிர்வு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவொருவரும் தனக்கு சொந்தமானவைகளில் ஒரு சிறிய பகுதியையே கொடுக்கிறார்கள். சபைகளில் ஆஸ்திகளை பகிர்ந்து கொள்ளுதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்று நிருபிக்க சபை தலைவர்கள் வெளிப்படையான வாக்கு வாதங்களை சொல்லுவது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஏனென்றால் நிறைய சபை மக்களுக்கு இந்த மாதிரியான வாக்கு வாதங்கள் பிடிக்கும்; அவர்களுடைய ஆஸ்திகளை குறித்த சுயநலத்தை சுயநலத்தை மறைக்க ஒரு காரணம் வேண்டும்.

முன்பு சொல்லப்பட்ட தசமபாக பழக்கம் வெவேறு சபைகளில் பரவி இருக்கிறது. நிறைய ஜனங்கள் இது வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று எண்ணுகிறார்கள். வேதத்தில் கூட இதை பற்றி சில காரியங்களை காண முடியும். ஆனால் அது கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒரு பழக்கமாக இருந்தது என்பதை நாம் பார்க்க முடியாது. பழைய ஏற்பாட்டில் தசமபாகம் என்பது ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் உதவிக்காகவும் தேவாலயத்தில் நடக்கிற பலிகளின் செலவுக்காகவும் கொடுக்கப்பட்டது. மேலும் அது தவிர உபாகமம் 14:28–29படி எல்லா மூன்றாம் வருஷமும் தசமபாகம் தேசத்திலிருக்கிற ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனபோதிலும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் மத்தியில் தசமபாகத்தை குறித்த அடையாளம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள் என்று நாம் பார்க்கிறோம். இது அப்போஸ்தலர் 4: 32 ஆம் வசனத்தில் சொன்னது போலவே ஒரே மனமும், ஒரே இருதயமுமாய் இருந்தார்கள் என்பதற்கு பொருந்தும். இந்த மாதிரியான ஆழமான நம்பிக்கையையே குடுபங்களில் கூட பல நேரங்களில் பார்க்க முடிகிறதில்லை; பணம் என்று சொல்லும் போது இந்த நம்பிக்கைக்கு ஒரு எல்லைகோடு வந்துவிடும். ஒருவர் ஒருவருடைய வாழ்க்கையை ஆழமாய்அறிந்ததினாலே இந்த அளவுக்கு நம்பிக்கை வைக்க முடிந்தது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்களுடைய பணம் மற்றும் மற்ற பொருள்களை ஒருவர் மற்றவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.மேலும் அவர்கள் அது தேவனுடைய சித்தத்தின்படி பயன்படுத்தப்படும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆடுகளுக்குள் ஓநாய்கள்

ஆரம்ப நாட்களில் யூத மக்கள் கிறித்தவர்களை உயர்ந்த மதிப்புள்ளவர்களாக எண்ணினார்கள். இருந்தபோதிலும் இயேசு முன்பு உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேற நிறைய நாள் எடுக்கவில்லை.

ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு10:16–22)

ஆரம்பத்தில் இருந்த யூதத் தலைவர்கள் இந்த புதிய மதகோட்பாடுகளை பரவ விடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்தார்கள்; யூதர்கள் மத்தியில் அவர்களுடைய செல்வாக்கு மற்றும் மதிப்பு போய்விடும் என்று பயந்தார்கள். தம்முடைய சொந்த வாழ்க்கையின் உண்ணமைகளுக்கு செவிகொடுக்க தயாராக இல்லை. அதனால் அவர்கள் அப்போஸ்தலர்களை பேச விடாமல் தடுத்தும் அடித்தும் சிறையிலே வைத்தார்கள். ஆனாலும் சீடர்கள் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள். (அப்போஸ்தலர் 5:42). ஸ்தேவான் நீதியுள்ள தேவனின் குமாரனை கொன்ற குற்ற்றப்பழி யூதர்களின் ஆலோசனை சங்க உறுப்பினர்களை சாரும் என்று உணர வைத்தான். மேலும் தேவனை எந்த அளவுக்கு எதிர்த்தார்கள் என்றும் காண்பித்தான். இதன் பிறகு யூதர்கள் ஸ்தேவான் மீது கல்லெறிந்து கொன்றார்கள். இதனால் இஸ்தேவான் இயேசுவினுனடய எடுத்துக்ட்டை பின்பற்றிய முதல் இரத்த சாட்சியானார்.பவுல் கூட அவரின் ஊழியத்தில் யூதர்கள் மற்றும் புறஜாதிகளினாலே எவ்வளவு துன்பப்பட்டார் என்று நாம் வாசிக்கிறோம்.

கிறிஸ்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் பழக்கப்படி வாழவில்லை. மாறாக தேவனுடைய பிள்ளையாய் இருந்தபடியால் சுவிசேஷத்தின் சத்தியத்தை செய்கிற பணியில் விழிப்பாய் இருந்தார்கள். ஆதலால் மனம் திரும்புதலுக்கு எதிர்த்து நின்ற அவிவிசுவாசிகளின் மத்தியில் கூட அசைக்கப்படாதவர்களாய் இருந்தார்கள். இந்த கிறிஸ்தவர்கள் அவர்களின் வாழ்க்கையின் மூலமாய் எல்லாருக்கும் தேவனின் சித்தம் என்ன என்றுகாண்பிக்க விரும்பினார்கள். கோணலும் மாறுபடும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே ஒளி போல பிரகாசிக்க பவுல் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார் (பிலிபியர் 2:15).அவர்கள் உலகத்தை இந்த பார்வையிலே தான் பார்த்தார்கள். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் (யாக்கோபு4:4).தங்களுடைய சொந்த திட்டங்கள், ஆசைகளுக்காக வாழ்கிற உலக மக்களை போல அல்லாமல், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மதிப்புகள், செய்த வேலைகள் மறுபாடுள்ளதாய் இருந்தது. இந்த விஷயங்கள் தேவனுடைய சாட்சி என்று ஏற்று கொள்ளாதவர்களுக்கு இது அவர்களுக்கு எதிராய் செய்த குற்றச்சாட்டாய் இருந்தது. இதனால் சில நேரங்களில் சுவிசேஷம் மற்றும் அதை பிரசிங்கத்தவர்களுக்கு எதிராக வன்முறையில் கொண்டுபோய்விட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் இயேசுவின் மேல் விசுவாசத்தை அறிக்கையிட்டவர்கள் அந்நியர்கள் என்று எண்ணப்பட்டார்கள். இன்று நிறைய ஜனங்கள் உலக விஷயங்களில் சந்தோஷம் தேடுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவைகளிலிருந்த பிரிந்து இருந்தார்கள். பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்ப அவர்களை அழைத்தார்கள். இப்படி அவர்கள் செய்ததினால் மக்கள் அவர்களை பகைத்தார்கள். மேலும் அவர்களுக்கு விரோதமாக தவறான விஷயங்களை பரப்பினார்கள். இந்த உபாத்திரவ காலத்தில் நிறைய கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லாமல் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

நம்முடைய வாழ்க்கையில் இதன் அர்த்தம் என்ன?

முதலாம் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை அவர்களால் தீர்மானிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விதிமுறை அல்ல. அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொடுத்தார்கள். தங்களுடைய அனுதின வாழ்க்கை, ஓய்வு நேரம், வரங்கள், திறமைகள், சந்தோஷம், துன்பம், பணம், சொத்து மற்றும் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் கொடுத்தார்கள். ஆண்டவருக்காக வாழ்வதற்கு தேவையான எல்லா விஷயங்களை குறித்தும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய விரும்பினார்கள். இயேசுவின் சீடர்களாய் இருந்ததினாலே இயேசுவின் அர்ப்பணிப்பை பின்பற்ற விரும்பினார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் எழுதியது போல..

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 3:16)

சகோதர சகோதரிகளுக்குள்ளே அன்பு எப்படி இயல்பானதோ அதேபோல அவர்களுக்குள்ளேயும் இருந்தது. இந்த அன்பு தேவனிடத்தில் உள்ள அன்புக்கு வெளிப்பாடாய் இருந்தது. இதை அப்போஸ்தலனாகிய யோவான் எளிய மற்றும் தெளிவான முறையில் எழுதுகிறார்.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். (1யோவான் 4:19–21)

இந்த விஷயம் இயேசுவை பின்பற்ற அதாவது கிறிஸ்தவர்களாய் மாற விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பொருந்தும். கிறிஸ்தவனாக இருப்பது என்பது எனக்கும் தேவனுக்கும் உள்ள உறவு மற்றும் எப்பொழுதாவது சபைக்கு சபை கூட்டங்களில் பங்கு பெறுவது என்று நினைப்பது தன்னைத்தான் வஞ்சித்தது போலாகும். இதற்கு அதிகமான பின் விளைவுகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு சபை தான் மணவாட்டியாக இருக்கிறது. தனிப்பட்ட கிறிஸ்தவன் அல்ல. சபை சரீரமாக கூட அழைக்கப்பட்டிருக்கிறது. தலையாகிய கிறிஸ்துவில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். தலைவராகிய இயேசு உறுப்பினர்களை எல்லா பொதுவான சேவைக்கும் வழிநடத்துவார்.

எங்களின் வாழ்க்கையில் நாங்கள் முதலாம் கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை எல்லா விஷயத்திலேயும் பின்பற்ற விரும்புகிறோம். இதற்காக நாங்கள் உங்களையும் அழைக்கிறோம். உண்மையாய்கிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிற ஜனங்களை அறிய மிக தூரமான இடங்களுக்கு பிரயாணம் பண்ணுவதில் சந்தோஷமாக இருக்கிறோம். இதை விரும்புகிறவர்கள் அநேகர் இல்லை என்று இயேசுவின் வார்த்தையாலும், எங்களுடைய சொந்த அனுபவத்தினாலும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.அநேகர் தேவனுடைய வழிகளில் நடக்க விரும்பவில்லை என்று வரலாறு கூட காண்பிக்கிறது. எங்களுடைய பொதுவான வாழ்க்கையின் மூலமாய், நம்முடைய வாழ்க்கையை மாற்ற தேவன் வல்லவராய் இருக்கிறார் என்று நாங்கள் சாட்சி கொடுக்க விரும்புகிறோம். இந்தக் காலத்தில் நாம் இப்படி வாழ்வது சாத்தியமா என்று விசுவாச குறைவு மற்றும் சந்தேகம் இல்லாமல் இருப்பதற்கு நாங்கள் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இந்த வாழ்க்கை மிகப்பெரிய ஆசீர்வாதமும் உண்மையான கிறிஸ்தவ அதாவது குணங்களை தாழ்மை, சுயநலமற்ற தன்மை, சுயம் வெறுத்தல், பக்தி, நீடிய பொறுமை, தயவு, மற்றவர்களை தம்மிலும் உயர்வாக எண்ணுதல், தனக்கானவைகளை தேடாமல் மற்றவருக்கு நல்லது தேடுதல் போன்ற குணங்களில் வாழ்வதற்கு எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் பார்க்கிறோம். இந்த வாழ்க்கையின் மூலமாய் இயேசுவினுடைய பலத்தால் நம்மாலே இவைகள் எல்லாம் செய்ய முடியும் என்று அனுபவிக்கிறோம். மேலும் அவர் நமக்காக செய்த அன்பையும் தியாகத்தையும் மென்மேலும் புரிந்து கொள்கிறோம் இது அவரை அதிகமாய் துதிக்கவும் நன்றி சொல்லவும் வழிநடத்துகிறது.

Scroll to top ↑