பாவத்திலிருந்து விடுதலை

தேவனுடைய திட்டத்தின்படி தூய்மையிலும் பரிசுத்தத்திலும் வாழ்கிற வாழ்க்கை.

பரிசுத்தமா இருப்பதற்கு அர்த்தம் என்ன?இந்த பரிசுத்தம் நம்மகிட்ட இருந்தும் மத்தவங்ககிட்ட இருந்தும் எதிர்பார்க்க முடியுமா? பாவத்திலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமா? இதைப்பற்றி பைபிள் என்ன சொல்லுது?

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
(1 பேதுரு 1:15–16)

புதிய ஏற்பாட்டை எழுதினவங்க ஒருசில நேரங்களில் கிறிஸ்தவர்களை பரிசுத்தவான்கள், பிரியமானவர்கள்ன்னு அழைக்கிறாங்க. (உதாரணம்: கொலோசெயர் 3:12) இந்தக் காலத்தில் பரிசுத்தம், பரிசுத்தவான்கள் என்கிற வார்த்தைகள் வழக்கத்தில் இல்லாததும், பழையக்காலத்துக்கு உரியதும், அனுதின வாழ்க்கையிலிருந்து எட்டாததும், மற்றும் ஒரு சில விசேஷ மக்களுக்கு பொருந்துற விஷயம்?

இது உண்மையா அல்லது பைபிள்ல இந்த பரிசுத்த வாழ்க்கை நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவுக்கு பிரிக்கமுடியாத விஷயம்ன்னு சொல்லப்பட்டிருக்கா?

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (I யோவான் 1:5–7)

உண்மையிலே பரிசுத்தமாய் இருக்கணும் என்ற ஆண்டவரின் கட்டளை நம்மை நித்திய வாழ்க்கைக்கு தயார்ப்படுத்துகிறது. இவ்வுலகத்திலும் சரி நம் நித்திய வாழ்விலும் சரி இந்த பரிசுத்தமில்லாமல் பூரண பரிசுத்தராகிய ஆண்டவருடன் ஐக்கியமாய் இருக்க முடியாது. பரலோகத்தில் பிரவேசிக்கிறதுக்கு பரிசுத்தம் ஒரு நுழைவுத் தேர்வு அல்ல - மாறாக இது ஆண்டவருடைய தன்மையிலிருந்து வருகிறது. இதே பரிசுத்தத்தில் தான் ஆண்டவர் மனிதனை சிருஷ்டித்தார் .

மேலே சொல்லப்பட்ட வசனங்கள் ஆண்டவருடைய பூரண பரிசுத்தத்தையும் நம்முடைய முழு வாழ்க்கை ஆண்டவரால் பரிசுத்தமாக்கபடுவதின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. நம்முடைய எல்லா பாவங்களையும் விட்டுவிடுவதற்கும் வலியுறுத்துகிறது. ஆண்டவர் பரிசுத்தராயிருகிறதுப் போல நாமும் பரிசுத்தமாய் இருக்கணும் என்ற மனப்பான்மை ஒரு கிறிஸ்தவ குணத்தை வெளிப்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிற நிறையப் பேர் இந்த இலட்சியத்திற்காக போராடுகிறதில்லை. இருந்தாலும் ஆண்டவரின் இரட்சிப்பின் மூலமாகவும் அவர்கிட்ட உதவிக்காக திரும்பும்போது அவர் தருகிற பெலத்தின் மூலமாகவும் பாவத்துக்கு எதிரான போராட்டத்தை நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்.

பாவத்துக்கு எதிரான போராட்டம் பரிசுத்த வாழ்க்கைக்கு தேவை

கடவுள் மனிதனை தன்னுடைய சாயலில் படைத்தார். மனிதன் பாவம் செய்தபோது அவனுடைய சுபாவம் பாதிக்கப்பட்டது. அதுவுமல்லாமல் கடவுளோடும் சகமனிதரோடும் கொண்டுள்ள உறவு பாதிக்கப்பட்டது. பாவம் மனிதனை கடவுள்கிட்ட இருந்து பிரித்து சுயநலமும் தனிமையும் உள்ள வாழ்க்கைக்கு கொண்டுப்போய் சேர்க்கிறது.

அதனால் தான் இயேசு இவ்வளோ தீவிரமான வார்த்தைகளை பயன்படுத்தி எவ்வளோ அதிகமாய் பாவத்தை வெறுத்து நிராகரிக்கனும்னு சொல்லிருக்கிறார்.

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.…உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்,.. (மாற்கு 9:43 & 47)

இந்த கண்டிப்பு இயேசு நம்மை பயப்படுத்துகிறதுக்காக சொல்லவில்லை. இயேசு ஒரு ஆன்மீக உண்மையைக் காட்ட விரும்புகிறார். பாவங்கள் மனிதனை மாற்றிவிடும், அவர்களை ஏமாற்றி கடினப்படுத்தும் மற்றும் கடவுளுக்காகவும் நன்மைக்காகவும் இருக்கும் ஏக்கத்தை எடுத்துவிடும். கடவுள்கிட்ட இருந்து நம்மை பிரித்துவிடும் - கொலோசியர் 3:5 ல் பவுல் இவ்வாறு விவரிக்கிறார்.


ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

பாவம் நம் மனப்பான்மையிலும் சிந்தனையிலும் ஆரம்பிக்கிறது. இதிலிருந்துதான் நம் நடத்தை வெளிப்படுது.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:28)

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாய் இருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். (மத்தேயு 5:21–22)

ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். (யாக்கோபு 4:17)

அடிக்கடி நாம் பார்க்கிறோம் நிறையப்பேர், விசுவாசத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு போராடாமல் இருப்பதும், பைபிள் வாசிக்காமல் இருப்பதுப் போன்ற அலட்சியம் பண்ணுகிற பாவங்களை பைபிள் சோதிக்கிற மாதிரி அநேகர் சோதிக்கிறதில்லை மற்றும் அவர்களுக்கும் கடவுளுக்கும் உறவு இல்லாததை இது தெளிவாய் காட்டுது. பாவத்துக்குப் போக்கு சொல்ல இடமில்லை.

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். (I கொரிந்தியர் 10:13)

பழைய ஏற்பாட்டில்கூட பாவத்தின் மேல் வெற்றிப் பெறுவது ஒரு கட்டளையாக இருந்தது. அது சாத்தியம்ன்னும் எண்ணப்பட்டது.

அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். (ஆதியாகமம் 4:6–7)

தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்க விரும்புகிறவர்களையும், பாவத்தை மேற்கொள்ள போராடுகிறவர்களையும் ஆண்டவர் தன்னுடைய பேரன்பினாலும் இரக்கத்தினாலும் அணுகுகிறார். இருந்தாலும் தங்கள் பாவங்களை பாவமென்று சொல்லாமலும் தங்கள் பெலவீனங்களை காரணமாக சொல்லி சாக்கு சொல்லுகிறவர்கள் மேல் தேவக்கோபம் பெரிதாய் இருக்கிறது. ஏனா

இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:1–2)

ஒருவன் பாவத்தில் எவ்வளவு அதிகமாய் மூழ்கி இருந்தாலும் கடவுள் ஒவ்வொரு மனிதரையும் நேசிக்கிறார் என்றும் அவரிடம் வர விரும்புகிறவர்களை ஏற்றுக் கொள்கிறார் என்றும் நமக்கு தெரியும். அனாலும் பாவம் நம்மை அவர்கிட்ட இருந்து பிரித்துவிடும் என்று நாம் அறிந்திருக்க வேண்டும். யாருமே இந்த விஷயத்தை உதாசினப்படுத்தி பாவத்தோடு விளையாடக்கூடாது.

பாவமன்னிப்பு ஒரு மிகப்பெரிய பரிசு. அதின் பெரும் மதிப்பை தெரிந்திருகிறது முக்கியம். இதை மலிவாக பேரம் பேசுகிற மாதிரி நினைக்க கூடாது. ஏனா நம்மை நம் பாவகளிலிருந்து இரட்சிக்க இயேசு தன் ஜீவனைக் கொடுத்தார். அதனால் நாம் பாவத்தைப் பற்றி கொள்ளுகிறவர்களாய் இராமல் அதிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களாய் வாழனும்.

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. (I பேதுரு 1:18–19)

பாவத்தை மேற்கொள்வது

சங்கிதம் 32:3–5 & நீதிமொழிகள் 28:13 ல்ல நாம் வாசிக்கிறோம் மன்னிப்பையும் விடுதலையும் பெறுவதற்க்கான ஒரே வழி நம் பாவைகளை அறிக்கையிடுகிறது தான்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28:13)

ஆண்டவரிடம் நம் பாவங்களை அறிக்கையிடுவது முக்கியமானதும் மற்றும் நல்லது. ஆனால் அதை மற்ற ஜனங்கள் முன்னாடி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது உண்மையான மனம்வருந்துதலை காட்டுது. நாம் சத்தியத்தில் வாழ்ந்தால், நம்முடைய சகோதர சகோதரிகள் முன்பாகவும் சத்தியத்தில் நடக்க வேண்டும்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (I யோவான் 1:9)

நாம் கிறிஸ்துவுடன் வாழ ஆரம்பித்த நாட்களில் மட்டும், நாம் உலகத்துக்கு கட்டப்பட்ட விஷயங்களை பின்னாடி போடுவதும் நம் பாவங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதும் முக்கியமா இருக்கக்கூடாது. அனால் நம்முடைய முழு கிறிஸ்தவ வாழ்க்கையிலும் நம் பாவங்களை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் அறிக்கைப்பண்ணி ஒருவர்க்கொருவர் ஜெபம் பண்ணுவதன் மூலமாக பரிசுத்தமாகலாம். இதைக்குறித்து யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் (யாக்கோபு 5:16) சொல்கிறார். மத்த விசுவாசிகளின் பாவங்களும் பாவ அறிக்கைகளுடைய பொருப்பும் பைபிள் கல்லூரியில இல்ல சிறப்பான பயிற்சிப்பெற்ற ஒரு சில ஊழியக்கரர்களுடயது மட்டும் அல்ல. இப்படிப்பட்ட முறைகளுக்கு எந்த ஆதாரமும் பைபிள்ல இல்ல. அதுக்கு மாறாக விசுவாசிகள் மத்தியில ஆழமான நம்பிக்கையும், நம்முடைய ஆவிக்குரிய நிலைமை மற்ற விசுவாசிகளுக்கு அப்படியே காட்டுகிற இந்த விருப்பம், சபையில தேவனுடைய செயல்களுக்கு சாட்சியாயிருக்கும். நம் பாவங்களை ஒருவருக்கொருவர் திறந்து வைக்கிறதற்கும், மன்னிப்பு பெறதற்கும், அவர்களுடைய ஜெபங்களில் நம்மை ஏந்திக்கொள்ளவும் மற்றும் பரிசுத்தமாக்கப்படுவதர்க்கு ஊக்கங்களாலும் ஒருவருக்கொருவர் துணையாகவும் இருப்பதனால் மட்டுமே சகோதர சகோதரிகள், ஒருவருக்கொருவர் உண்மையான உதவியைக் கொடுக்க முடியும்.

யோவான் 13:2–17 ல்ல இயேசு தன்னுடைய சீடர்களுடைய பாதங்களை கழுவி, நாம் எப்படி ஒருவரை ஒருவர் சேவை செய்யனும்னு முன்மாதிரியா காட்டியிருக்கிறார். பாவத்தில் அடிமையாயிருப்பவர்கள் முன்பாகத் தன்னை தாழ்த்தி அதன் மூலமாக தன்னுடைய பேரன்பை காட்டினார். நாம் ஒருவருக்கொருவர் முன்பாகத் தாழ்மையா இருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பினால் தாங்கவும் அவர்கிட்ட இருந்துக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் பரிசுத்தப்படுவதில் வளருவோம் மற்றும் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கும் உதவியாக இருப்போம். ஒருவரை ஒருவர் சேவை செய்றதையும் மற்றவங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அக்கறையோட பார்த்துக்கிறதையும் பிரிக்க முடியாது.

அவருடைய சரிரமா இருக்கும் சபையை பரிசுத்த ஆலயமாக (எபேசியர் 2:21) கட்டுவதற்காக ஆண்டவர் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவக்கூடிய திறனை கொடுத்திருகிறார். அதனால சபையினுடைய எல்லா அவயவங்களுக்கும் பார்த்துக்கொள்ரதுக்கான பொருப்பைக் கொடுத்திருகிறார்.

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபிரெயர் 12:14)

கடவுள் கூட இருக்கிற இந்த வாழ்க்கையை தெரிஞ்சிக்க, உங்களையும் அழைக்கிறோம்.

நாங்கள் கிறிஸ்து இயேசுவை எங்கள் வாழ்கையில் பின்பற்ற முடிவு செய்திருக்கிற கிறிஸ்தவர்கள். முதல் கிறிஸ்தவர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் பைபிள்ல விவரமா நங்கள் பார்க்கும்போது, இன்றைக்கு இயேசுவை நம் நடைமுறை வாழ்கையில் எப்படி பின்பற்றதுன்னு எங்களுக்கு காட்டுகிறது. நாங்கள் எந்தவொரு பிரிவையும் அல்லது எந்தவிதமான அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல, புதுசா எதையும் ஆரம்பிகிறதும் எங்களுடைய நோக்கமில்லை. ஆனால் பைபிள்ல இருக்கிற சகோதரர்களை உதாரணமாய் வைத்து நாங்கள் வாழவேண்டும் என்பது மட்டும் தான். விசுவாசம் எங்களுக்கு நிஜமானதும் அது எங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் ஊடுருவி இருக்கிறது.

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (I யோவான் 3:14–16)

Scroll to top ↑