Download PDFDownload eBook (ePub)
நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே இந்த மாதிரியான கேள்விகள் கேட்டுருக்கீறீர்களா? ‘நான் எங்கே போகிறேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?
இந்த சமுதாயத்தில், நம்முடைய வாழ்க்கைக்கு முழுமையை கொடுக்கிறது போல தோன்றுகிற பலவித விஷயங்களால் சூழப்பட்டு இருக்கிறோம். ஆனால் இவைகளால் நமக்கு தற்காலிகமானவைகளை மட்டுமே கொடுக்க முடியும். அவைகளால் வாழ்வின் உண்மையான நிலையான நோக்கத்தை கொடுக்க முடியாது. ஒரு நிலையான நோக்கத்தால் மட்டுமே அழியாத சந்தோஷமும் அமைதியும் கொடுக்க முடியும். இந்த உலகத்தின் சலுகைகள் குறுகிய காலமே; மேலும் அவைகள் அழிந்து போகும். அதனால் இந்த உலகத்திற்கு அப்பால் இதற்கான பதிலை தேட வேண்டும். அதாவது நாம் கடவுளை தேட வேண்டும். கடவுள் நம்மை உருவாக்கினார், நமக்கு எது நல்லது என்று அவருக்கு தெரியும். ஏனென்றால் அவர் முடிவில்லாதவர்; அவரால் மட்டுமே முடிவில்லாதவைகளை கொடுக்க முடியும். இதைப்பற்றி இயேசு சொல்லுகிறார்…
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு 6: 19–21
ஜாக்கிரதையாய் இருங்கள்! அழிந்துபோகிற பொக்கிஷங்களை சேர்ப்பது உங்கள் இருதயங்களை அதோடு பிணைத்து விடும். உங்களுடைய கல்வி, வேலை, சினிமா, மற்றும் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு அதிசீக்கிரமாய் அடிமைகளாகிவிடுவீர்கள். உங்களுடைய நேரத்தையும், சக்தியையும் அதற்க்காக கொடுப்பீர்கள். உங்களால் வேறே எதைப் பற்றியும் யோசிக்க முடியாது. உங்கள் சுதந்திரத்தை இழந்து விடுவீர்கள். ஆனால் ஆன்மீக பொக்கிஷங்களை தேடினால் உண்மையான சந்தோசத்தை அனுபவிக்க முடியும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள கடவுள் உதவி செய்வார்.
இயேசு காண்பித்த வழி
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பி நம்மேல் உள்ள அன்பை காட்டினார். இதன் மூலம் சத்தியத்தை தெரிந்துக்கொள்ள உதவி செய்தார். சத்தியம் ஒரு அடையமுடியாத ஞானம் அல்ல. இயேசு தன் வார்த்தையில் (சத்தியம்) ஒவ்வொரு தீமை மற்றும் பாவத்திற்கான காரணங்களை பேசி நம்முடைய சுயநல வாழ்க்கையிலிருந்து வெளியே வர உதவி செய்வார். அவருடைய ஆன்மீக அணுகுமுறை தனிச்சிறப்பு உடையது. இயேசு சொன்னது வெறும் பேச்சாக மட்டுமல்ல. அவர் நீதியான, பரிசுத்தமான, தூய வாழ்க்கை வாழ்ந்தார். இந்த மாதிரியான வாழ்க்கை எவரும் வாழ்ந்ததில்லை. நம்மையும் அவருடைய உதாரணத்தை பின்பற்ற அழைக்கிறார். அதற்கு அர்த்தம் நம்முடைய விருப்பங்களையும் திட்டங்களையும் விட்டுவிட தயாராக இருக்க வேண்டும்.
பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மாற்கு 8:34–37
நம்முடைய ஆத்மா மற்றும் வாழ்க்கையும் விட முக்கியமானது வேறொன்றும் இல்லை. ஆதலால் நம்முடைய இரட்சிப்புக்கு தடையாய் இருக்கிற எல்லா தடைகளையும் தள்ளிவிட எல்லா முயற்சிகளையும் செய்ய கூடாதா? நம்முடைய சுயநல விருப்பங்களையும், திட்டங்களையும் விட்டு தேவனுக்காக வாழவேண்டும். இந்தமாதிரி வாழ்ந்து கடவுள் நம்மேல் வைத்த அன்புக்கு பதில் கொடுக்க முடியும். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததால் நம்மை எப்பொழுதும் மன்னிக்க தயாராய் இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு கஷ்டமாக தோன்றினாலும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. ஏனென்றால் எல்லா கஷ்ட்டங்களையும் மேற்கொள்வதற்கான சக்தியை தேவன் நாக்கு கொடுக்க விருப்புகிறார். ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு இயேசு ஒரு போதகராக மாத்திரம் அல்ல ஒரு சகோதரனாக கூட இருந்து நமக்கு உதவி செய்கிறார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவை முழு இருதயத்தோடு பின்பற்றுவார்கள்
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இயேசுவை முழு இருதயதோடு பின்பற்றுவது. நம்முடைய வாழ்க்கையில் தேவனை முதலிடத்தில் வைத்தால் மட்டுமே தான் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட தகுதியுள்ளவர்கள். சிறுவயதில் இருந்தே மத கோட்பாடுகள், சட்டங்களை கடைபிடித்து வாழ்வது மட்டும் போதாது; இது தவறும் கூட. ஏதோ புத்தகத்தில் படிக்கிறதாய் இல்லாமல் தேவனுடைய சித்தப்படி வாழ ஒரு உண்மையான தீர்மானம் எடுக்கவில்லை என்றால் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதில் அர்த்தம் இல்லை. உண்மையான தீர்மானம் இல்லையென்றால் நம் எல்லா ஆன்மீக செயல்களும் சடங்கு சம்பிரதாயமாக மாறி நம்மை வெறுமையாக்கிவிடும். பிறகு கீழே இயேசு சொன்ன வாக்குத்தத்தம் நம் வாழக்கையில் நிஜம் ஆகாது.
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35
ஆசிர்வாதத்தை மட்டுமே எதிர்பார்க்கிறதிற்கு பதிலாக கடவுளிடம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்
நிறைய மக்கள் கடவுளிடம் இருந்து அதிகமாக எதிர்பார்கிறார்களே தவிர எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு தயாராக இருக்கிறதில்லை? நம்மை முழுமையாக அர்ப்பணிக்க தயாராக இல்லாமல் எல்லா விதமான ஆசிர்வாதங்களும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் தேவனோடு உறவு வைக்க முடியுமா? உறவு என்பது எப்போதும் ஒரு பக்கம் மட்டும் அல்லாமல் இருவரின் சம பங்கேற்பு தான் உண்மையான உறவு. அப்போஸ்தலர் பவுல் கூட ரோமாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார்:
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1
இயேசுவின் சீடர்களும், அவர்கள் மூலமாய் பிறகு கிறிஸ்தவர் ஆன அனைவரும் தங்கள் முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து தேவனுக்கு சேவை செய்தார்கள். இந்தமாதிரியான அர்ப்பணிப்பு ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில மாத்திரம் அல்ல. அவர்களின் சேவை ஒரு தனி நபராய் இல்லாமல் மற்ற சகோதரர்கள் கூட சேர்ந்து செய்தார்கள். முதல் கிறிஸ்தவர்களின் இந்த ஐக்கிய வாழ்வு, இன்றும் என்றும் வாழும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு முன் உதாரணம் ஆகும்.
நான் எங்கே போகிறேன்? என்ற கேள்வி, நான் எங்கே போக வேண்டும்? என்ற கேள்விக்கு வரவேண்டும். அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு இயேசுவிடம் கேட்டார்.
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. யோவான் 6:68