ஈஸ்ட்டர் வாழ்த்துக்கள்…?

வருடத்தில் ஒரு முறை மட்டும்தான் நாம் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் நினைக்கணுமா?

கடவுள், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நமக்கு அனுதினமும் நம் பாவங்களில் இருந்து வெளிவருவதற்கும் பரிசுத்தமாய் வாழ்வதற்கும் கொடுக்க விரும்புகிறார்.

ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. (ரோமர் 6: 8–14)

நாங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் (நாங்கள் அமைப்பும் அல்ல, எங்களில் தலைவரும் கிடையாது). நாங்கள் அனுதினமும் கிறிஸ்துவின் இறப்பை நினைக்கவும் அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடவும் விரும்புகிறோம். இவ்வாறு செய்ய விரும்புவோரையும் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

Scroll to top ↑